Tuesday, February 28, 2017

மூச்சின் சூட்சுமம்

"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம்
இடது காலைத் தூக்கி ஆடும் சிவனின் கோலத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஏன் இடது காலைத் தூக்க வேண்டும் என தோன்றியதுண்டா?
கால் என்றால் காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. காற்றுக்கும் இடது பக்கத்திற்கும் தொடர்பு உண்டா? உண்டு.
மனிதனுக்கு மூக்கு ஒன்று என்றாலும் அதில் இரண்டு நாசித் துவாரங்கள் உள்ளன. வலது நாசித்துவாரம் வழியாகவும், இடது நாசித் துவாரம் வழியாகவும் மூச்சுக் காற்று சென்று வந்து கொண்டிருக்கும். வலது பக்கம் செல்லும் சுவாசத்திற்கு சூரிய கலை என்றும், இடது பக்கம் செல்லும் சுவாசத்திற்கு சந்திர கலை என்றும் பெயர். கலை என்றால் சுவாசத்தின் பகுதி என்று பொருள். கலை என்பதை நாடி என்றும் கூறலாம்.
சூரியன் என்றாலே உஷ்ணம்; சந்திரன் என்றாலே குளிர்ச்சி. மனித உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை சூரிய கலையும், தேவையான குளிர்ச்சியை சந்திர கலையும் தருகின்றன.
உள்ளத்தின் அளவில் மனிதன் நல்ல காரியங்களைச் செய்யும்போது, அவன் குளிர்ந்த மனம் உடையவனாகக் கருதப்படுகிறான். கருணை இல்லாதவனை கல்நெஞ்சச்காரன் என்று குறிப்பிடுவர். மனம் குளிர்ந்தால்தான் கருணை பொழியும். மனிதனின் ஜீவாதரமான இதயம் இடப்பக்கம் இருக்கிறது. அந்த இதயத்தில் எப்போதும் கருணை சுரந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதற்காகவே சிவன் இடது காலை தூக்கி ஆடிக் கொண்டிருக்கிறார். (இடதுகால் - இடப்பக்கம் ஓடும் மூச்சு.)
சிவனையும், நாம் விடும் மூச்சையும் தொடர்புபடுத்துவது எதனால்?
கால் என்றால் காற்று; காற்றின் மற்றொரு பொருள் ‘வாசி’. வாசி என்றால் 'படித்தல்'. பாடத்தை வாசிப்பது போல் மனிதன் தன் மூச்சு வரும் வழியை வாசிக்க வேண்டும். வாசித்தால் வாழ்வு வளம் பெறுவோம். மனிதனின் ஆயுள் நீடிக்கும்.
"சிவா சிவா" என்று இடைவிடாமல் தொடர்ச்சியாக சொல்லிப் பாருங்கள். "வாசி, வாசி" என்று வரும். "வாசி வாசி" என்று சொல்லுங்கள். "சிவா, சிவா" என்று வரும். வாசி என்றால் சுவாசம். நமக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது. ஒன்றின் வழி போனால் மற்றொன்று தாமே நம்மைத் தேடி வரும்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

தந்திரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும்.
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என் தீர்மானம் போட்டது.
சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையடக்கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என் கூறியது.சிங்கமும் சரி என கூறியது.தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திருக்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். மிகுந்த கவலையுடன் சென்று கொன்றுக்கும் பொது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜவிடம் சென்றது.சிங்கராஜவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.சிங்கமும் காரணம் கேட்டது, அதற்க்கு முயல் "சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்ட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று" அதற்க்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியதுஇதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது,
முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது,

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

சீறும் பாம்பு

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது. ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

சர்வ காரிய சித்தி மந்திரங்கள் 20

அஷ்டலெட்சுமி துதி (தேவி சூக்தம்)

1. தனலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

2. வித்யாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

3. தான்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

4. சௌபாக்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

5. வீரலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

6. சந்தானலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

7. காருண்யலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

8. மஹாலெட்சுமி

யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677

சர்வ காரிய சித்தி மந்திரங்கள் 19

கலைகளில் தேர்ச்சி பெறவும், நினைவாற்றலுக்கும்

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனாத் பவேத்.

இதை தினமும் 12 முறை கூறவும்.


சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ

இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம். 


B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, February 24, 2017

நவதிருப்பதி திருத்தலங்கள் தசாவதாரமும் நவகிரகங்களும்:


பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.
வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்
என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.
அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்
கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:
சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம்
விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):
சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்:
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:
புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:
குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:
சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்
திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:
சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்
திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
நவதிருப்பதி ஆலயங்களை: ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.
இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,
திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது
இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, February 23, 2017

ஒற்றுமை

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார். நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன் மூத்த மகனை அழைத்து நான்கு கொம்பிகளையும் ஒன்றாக கட்ட சொன்னார். பிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள். ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்கள் நாலு பேரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.
தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

சதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25 முகங்களும்

சிவபெருமானின் 5 முகங்கள்:-
1. ஈசான முகம்
2.
தத்புருஷ முகம்
3.
அகோர முகம்
4.
வாமதேவ முகம்
5.
சத்யோஜாத முகம்
ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன:-
ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. சோமாஸ்கந்தர்
2.
நடராசர்
3.
ரிஷபாரூடர்
4.
கல்யாணசுந்தரர்
5.
சந்திரசேகரர்
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. பிட்சாடனர்
2.
காமாரி
3.
காலாரி
4.
சலந்தராரி
5.
திரிபுராரி
அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. கஜசம்ஹாரர்
2.
வீரபத்திரர்
3.
தக்ஷிணாமூர்த்தி
4.
கிராதமூர்த்தி
5.
நீலகண்டர்
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. கங்காதரர்
2.
சக்ரவரதர்
3.
கஜாந்திகர்
4.
சண்டேசானுக்கிரகர்
5.
ஏகபாதர்
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. லிங்கோத்பவர்
2.
சுகாசனர்
3.
உமாமகேசர்
4.
அரிஹரர்
5.
அர்த்தநாரி

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்?

 இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16 விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு. ஆனால் அனைத்துவிதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு.
தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம். அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும் (பச்சை) கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.
 தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள். தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.
 காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும். இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும். தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.

 கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது. கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும். மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜ்யோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார். இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Wednesday, February 22, 2017

சர்வ காரிய சித்தி மந்திரங்கள் 18

மாலையில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபஜ்யோதி பரம் பிரம்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம்
சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் கரோது கல்யாணம்
ஆரோக்யம் சுகசம்பதம்
மம புத்தி ப்ரகாசாய
தீப ஜ்யோதிர் நமோஸ்துதே

திருவிளக்கு ஸ்தோத்திரம்

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷ?மியே நம
ஓம் தீப லக்ஷ?மியே நம
ஓம் மஹா லக்ஷ?மியே நம
ஓம் தனலக்ஷ?மியே நம
ஓம் தான்யலக்ஷ?மியே நம
ஓம் தைர்யலக்ஷ?மியே நம
ஓம் வீரலக்ஷ?மியே நம
ஓம் விஜயலக்ஷ?மியே நம
ஓம் வித்யா லக்ஷ?மியே நம
ஓம் ஜெய லக்ஷ?மியே நம
ஓம் வரலக்ஷ?மியே நம
ஓம் கஜலக்ஷ?மியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ?மியே நம
ஓம் ராஜலக்ஷ?மியே நம
ஓம் கிருஹலக்ஷ?மியே நம
ஓம் சித்த லக்ஷ?மியே நம
ஓம் சீதா லக்ஷ?மியே நம
ஓம் திரிபுரலக்ஷ?மியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷ?மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

ஸ்ரீ சக்கரம்

(நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)


ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ



B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677