Thursday, June 29, 2017

"உழைப்பே உயர்வு தரும்"

ஊருக்கு நடுவிலே ஒரு பெரிய மரம் இருந்தது.
அந்த மரத்திடம் ஏதோ தீய சக்தி இருப்பதாக
மக்கள் அருகில் செல்ல பயந்து வந்தனர்
இதையெல்லாம் பார்த்த ஒரு இளைஞனுக்கு மிகவும் ஆத்திரம் வந்தது.
ஒரு நாள் யாரும் இல்லாத இரவு வேளையில் அந்த மரத்தை வெட்டி சாய்க்கக் கோடறியுடன் புறப்பட்டான்.
மரத்தை வெட்டக் கோடறியை ஓங்கினான். அடுத்த நொடியே ஒரு பூதம் அவனுக்கு முன்னால் குதித்து அவனைத் தடுத்தது
இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கும்போது பூதம் அவனைத் தாக்கத் தொடங்கியது
இளைஞன் பொறுமை இழந்தான்.
"இரண்டே அடியில் பூதத்தை வீழ்த்தி விட்டான்."
பூதம் உடனே அவன் காலைப் பிடித்துக் கொண்டு மரத்தை வெட்ட வேண்டாமென்று கெஞ்சினான்.
இளைஞன் மரத்தை வெட்டி சாய்ப்பதிலேயே குறியாக இருந்தான்.
இப்போது பூதம் ஒரு பெரிய மூட்டையை அவனிடம் கொடுத்தது அது முழுவதும் பணம்.
" இதை நீயே வைத்துக் கொண்டு மரத்தை விட்டு விடு" என்றது.
இளைஞன் யோசித்தான்.
" சரி! இப்போதைக்கு விட்டு விடுவோம். இன்னொரு நாளைக்கு வந்து வெட்டிக் கொள்ளலாம். நமக்கும் நிறையப் பணம் கிடைக்கும் ". என்று எண்ணியபடி மூட்டையை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.
நாட்கள் ஓடின. பூதம் கொடுத்த பணமெல்லாம் தீர்ந்து போனது. மீண்டும் பணத்தேவை வந்தது.
அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 
"
மீண்டும் அந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தால் பூதம் வந்து பணம் கொடுப்பானல்லவா ?"
எண்ணம் வந்தவுடனே கோடறியுடன் கிளம்பிவிட்டான்.
மரத்தை நெருங்கி அதை வெட்ட முயற்சித்தான். மீண்டும் பூதம் வந்து அவனைத் தடுத்தான். இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கினான். பூதம் முன்பு போலவே அவனைத் தாக்கியது 
இளைஞனும் திரும்பத் தாக்கினான்.
ஆனால் இம்முறை "பூதம் அவனை ஒரே அடியில் வீழ்த்தி விட்டது"
இளைஞனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 
"
கடந்தமுறை தோல்வியடைந்த பூதம் இன்று எப்படி ஜெயித்தது? " என்று குழம்பினான்.
இப்போது பூதம் சொன்னான்,
முன்பு வைராக்கியமாய் என்னுடன் சண்டையிட்டாய். ஜெயித்தாய்.
இப்போது "காசுக்காக" என்னிடம் சண்டையிட்டாய். மண்ணைக் கவ்வினாய்".
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677


Saturday, June 24, 2017

கற்றுக்கொள்ளவா கற்றுதரவா

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.
பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.
அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.
அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் "இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்.
தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.
அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.
இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.
அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.
‘‘
வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.
அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.
‘‘
நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.
‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?
உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.
ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.
*நெசவாளி சொன்னான்:* 
‘‘
இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’
ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.
நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

அது ஒரு சைக்காலஜி வகுப்பு...

ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.
அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...
வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...
அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, June 16, 2017

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.
வளைகுடா, பணம் கொழிக்கும் பூமி. கேரள மாநிலத்தின் 'கால்பந்து தலைநகரம்' என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள். மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும்.
மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.
புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.
'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.
இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.
நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.
இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர்.
அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.
நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.
கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில்,
''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்.
மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை
இறைவன் படைத்த உயிரை பலிகொடுத்து எந்த கடவுளையும் திருப்தி படுத்த முடியாது
மனித பிறவி மேன்மையானது அதை அனைவரும் போற்றுவோம்

அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

*மகிழ்ச்சியாக இரு ! ! !*

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் பிரகலாதன் மகிழ்ச்சியாக இருந்தான் . . .
சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் அரிச்சந்திரன் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும் விதுரர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும் பீஷ்மர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
இளம் விதவையான சமயத்திலும் குந்திதேவி மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 
தரித்ரனாக வாழ்ந்த போதிலும் குசேலர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பிறவிக் குருடனாக இருந்த போதிலும் சூர்தாஸர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துக்காராம் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
கணவன் கஷ்டப்படுத்திய போதிலும் குணவதிபாய் மகிழ்ச்சியாக இருந்தாள் . . . 
இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும் சாருகாதாஸர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளிய போதிலும் ஜயதேவர் மகிழ்ச்சியாக இருந்தார் . . . 
மஹாபாபியினிடத்தில் வேலை செய்த போதிலும் சஞ்சயன் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதிலும் பூந்தானம் மகிழ்ச்சியாக இருந்தார் . . . 
கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்திய போதிலும் தியாகராஜர் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதிலும் மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மகிழ்ச்சியாக இருந்தார் . . .
சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த போதிலும் கூரத்தாழ்வார்மகிழ்ச்சியாக இருந்தார் . . . 
இவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ?  அதுதான் பிரம்ம ரகசியம் என்பது.....!
தன்னோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால் !!! 
இறைவன் எப்பொழுதும் தன்னோடு இருக்கின்றான் என்று உணர என்ன வழி?
தன்னை அறிந்தால் தன் தலைவனை அறியலாம் . . . தன்னை அறிய தன்னை உணர்ந்த
உண்மை குருவை நாடுவதே சிறந்த வழி... அதனால் இனி வாழ்வில் நிகழும் சின்ன சின்ன விஷயங்களுக்காக கலங்காதே!
*எது எப்படி இருந்தாலும்,*

*எது எப்படி நடந்தாலும்,*

*யார் எப்படி* *நடத்தினாலும்,*

*யார் எப்படி* *மாறினாலும்,*

*எதை இழந்தாலும்,*

*யாரை இழந்தாலும்,*

*உன் இறைவன்* *உன்னுடன்*

*எப்போதும்* *இருக்கின்றான்*

*என்பதை முழுமையாக* 

*நம்பு....*

இறைவன் எப்போதும்
உன்னோடு இருப்பதை
உணரும் வழியை நாடு....
நீயும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
பிறரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு.
உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்.....!

அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Wednesday, June 14, 2017

சுயநலம் பொதுநலம்

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.
அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்
இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.
சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.
இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.
இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.
அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.
ஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.
அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.
ஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….!வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?
எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.
அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?
உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!
உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.
அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.
அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.
அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…!
இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.
ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.
ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!
அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்.


இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677