Friday, July 28, 2017

ராமகிரி பைரவர்

இதே மாதம் 30 ம் தேதி ஞாயிற்று கிழமை மிக, மிக... சிறப்பான நாள் அன்று அஷ்டமி வருகிறது. 

உலகில் உள்ள பைரவர் கோவில்களில் மிக, மிக சிறப்பான பைரவர் கோவில் என்றால் அது ராமகிரி பைரவர் கோவில் தான். 

ஊத்துக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கோவில்.

அரசு பேருந்துகள் ராமகிரி கோவில் ஆர்ச் வரை மட்டுமே வரும். அந்த ஆர்ச்சில் இருந்து சுமார் 3,4 கிலோமீட்டர் நாம் கோவிலுக்கு நடக்க வேண்டும்.

பிரைவேட் வண்டிகள், பிரைவேட் பஸ்கள் மட்டுமே கோவில் குளம் வரை செல்லும்.

அங்கே வாலீஸ்வரராக அருள் பாலிக்கும் சிவன் ஹனுமாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இந்த கோவில் குளத்தில் இருக்கும் நந்தீஸ்வரர் வாயில் இருந்து வழிந்து கொண்டே இருக்கும் நந்தி தீர்த்தம்.

இந்த நந்தி தீர்த்தம் பல ஆச்சர்யங்கள், அதிசயங்களை தன்னகத்தே உள்ளடிக்கியது .

குழந்தை இல்லாதவர்கள், நிரந்தர வருமானம், உத்யோகம் இல்லாதவர்கள் ராமகிரி பைரவர் கோவிலில் 8 விளக்குகள் ஏற்றி, 8 முறை அந்த கோவிலை வலம் வந்தால் பல அற்புதமான விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

புத்திர சம்பத்து முதலான கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.

இங்கே பைரவர் தான் மூலவர்.

இப்பொழுது நீங்கள் தரிசித்து கொண்டிருப்பது ராமகிரி கோவிலில் மூலவராக விளங்கும் பைரவர்.

அந்த கோவிலுக்கே நீங்கள் சென்றாலும் கிடைக்காத பைரவரின் இந்த அரியபுகைப்படத்தை நீங்கள் அனைவரும் பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள்.

இந்த பைரவருக்கு பின்புறம் வாலீஸ்வரர் சிவன் சந்நிதி.

சிவனுக்கு எதிரே கூப்பிய கரங்களோடு ஹனுமாரை இங்கே தரிசிக்கலாம்.

அன்புடன்

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, July 27, 2017

முட்டாள்தனம் கூட புத்திசாலித்தனமாக மாறிவிடும்

ஒருவனை முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.
அதில், ''இந்த கடிதத்தை கொண்டுவருபவன் கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்" என எழுதியிருந்தது.
அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்து விட்டு, "பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம். நீ எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?" என்று கேட்டார்.
அவன், "எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போது கூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்'' என்றான்.
அதிகாரி, "எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்று விட்டாய். நீயே பார்'' என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.
மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.
புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.
''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்'' என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.
உடன் பதில் வந்தது.
''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள். புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான்
அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்" என அதில் எழுதியிருந்தது.
சில சமயங்களில் முட்டாள்தனம் கூட புத்திசாலித்தனமாக மாறிவிடும்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, July 24, 2017

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது

"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். -ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களாஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு… – இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்சிலவற்றை அப்படியே விழுங்குவோம்சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ… – மாசேதுங்
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Saturday, July 22, 2017

வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)

ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு. நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.
1.மேல் மனம் (conscious Mind) அல்லது வெளிமனம்
2. ஆழ்மனம் ( Sub Conscious Mind).
மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம். மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும். மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது! நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்) எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.
1. நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.
உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும். நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:
1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.    2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.
3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும். உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும். நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் கனவு காணுங்கள்என்று சொன்னார்.
4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.
5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.
6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.
7. உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்…8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, July 17, 2017

கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.  அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.  அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.  அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.  அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.  கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார். கிருஷ்ணரின்  இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....பல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட்  செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்....

முயன்று  தான் பார்ப்போமே
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, July 14, 2017

*வாழ்க விவசாயி !* *வாழ்க இயற்கை விவசாயம் !*

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான். அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"
நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*
*மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு *பசு மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்குவதில்லை!
தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்கணும்னு நினைக்கிறான் !
*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி பேசறாங்க , நமக்காக நம்ம *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பேனா கூட வாங்கறதில்ல !,
நமக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்!* அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிறாங்க !
அரிசி போட்டவுடன் வேகணும் ! 
சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் ! 
பொடிசா இருக்கணும் ! 
ஆனா நோய் வரக்கூடாது ! !
பழுப்பு நிறத்துல இருக்கிற அரிசிய வெள்ளையா கேட்டா எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்? 
தப்பு யார் மேல ?
கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு கடைக்காரண்ட கேட்டா அவன் விளைவிக்கிறவண்ட சொல்லி
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்க
நாமும் வாங்கி சாப்பிடறோம்…! அப்பறம் டாக்டர தேடி அலையறோம் !
நாமெல்லோருமே ஆடு மாடு மேய்ச்சவங்க வாரிசுதான்.! 
என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும்.
இப்போ பேண்ட் சர்ட் , KFC Chicken, Pizza, Burger அப்போல்லுனு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?
*இன்னும் ஆடு மாட வச்சு சாணிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு காட்டுல நமக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீர்களோ!*
*நல்லதை சாப்பிட நினையுங்கள்.* 
*
சாப்பிட கொடுத்தவரை நினையுங்கள் !*.

*வாழ்க விவசாயி !* 
*
வாழ்க இயற்கை விவசாயம் !*
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, July 13, 2017

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது. நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு. எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
1. தியானம்
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள்
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள்
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள்
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள்
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள்
நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள்
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது.. உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும். உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும். உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும். உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும். உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Wednesday, July 12, 2017

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது?

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது?  அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்றால் திருமங்கையாழ்வாரின் ஒரு பாசுரம் உள்ளது.இந்த பாசுரம் திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்'  இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னாலே போதும்.  திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.
அந்த பாசுரம் இதுதான்
''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமமே''

நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன். நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள். அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் முக்திக்கு உத்தரவாதம்.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, July 7, 2017

கடவுள் பக்தி என்றால் என்ன?

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.  செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.  அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார். விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.அவர் தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்என்று பதில் சொல்லுங்கள்என்று சொல்லி அனுப்பினார்.அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு. நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.அதற்கு அந்தச் செல்வந்தர் தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.  கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று  பற்றுவதே உண்மையான பக்திஇப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677