Monday, May 15, 2017

ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில்

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.
தல வரலாறு
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.
தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.
இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.
ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.
இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பெயர்க் காரணம்
சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.
ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.
கோயில் அமைப்பு
கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.
ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.
தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.
பாதாள விநாயகர்
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.
காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.
தோஷங்கள் விலக பரிகார பூஜை
ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
தினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.250, ரூ.500, ரூ.1000, ரூ.1,500க்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது, பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவிலில் கொடுத்து விடுகிறார்கள். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.
1,500 பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்குபவர்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் தனியாக தோஷ பூஜை செய்கிறார்கள். இதில் கணவன், மனைவியர் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சிறப்பு தரிசனம், ஆசீர்வாத தரிசனம் இலவசம். பூஜைக்கு செல்பவர்கள் தாமரைப்பூ, வில்வ இலை வாங்கி செல்வது நல்லது. இதற்காக கோவிலில் ஆங்காங்கே இந்த பொருட்களை விற்பவர்கள் உள்ளனர். ரூ.20 கொடுத்தால் பை நிறைய இந்த பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.
பயண வசதி
ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம். சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்!

1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.
முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். 

அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.
சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ….. ஜெய்.
நன்றி சாய் spiritual
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Tuesday, May 9, 2017

பக்தர்களைக் காக்கும் நரசிம்மர்

பெருமாளின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் முக்கியமான ஓர் அவதாரம், மிகவும் விசித்திரமானவரும் கூட. பாதி மனித உருவமும் பாதி சிங்க உருவமும் கொண்டு, தனது பக்தரான பிரஹலாதரைக் காப்பதற்காகத் தோன்றினார். பார்ப்பதற்கு மிகவும் கோரமாகவும் கோபமாகவும் தோற்றமளித்த அவரை அணுகுவதற்கு தேவர்களும் அஞ்சினர். ஆயினும், சற்றும் அச்சமில்லாத பிரஹலாதர், நரசிம்மரை அணுகி பல்வேறு பிரார்த்தனைகளை முன்வைத்து, பகவான் எப்போதும் தமது பக்தர்களிடம் பரிவுடன் நடந்துகொள்பவர் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.

மிகவும் கொடிய விலங்காகிய சிங்கம், தன் எதிரிகளிடம் கொடூரமாக நடந்து கொண்டாலும், தனது குட்டிகளிடம் பரிவுடனே நடந்துகொள்ளும். அதுபோல, பகவானின் நரசிம்ம ரூபம் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும், பக்தர்களின் மனதிலிருந்து அச்சத்தை நீக்குகின்றது. பிரஹலாதரைப் போன்று பகவானால் பாதுகாக்கப்பட விரும்பும் பக்தர்கள் தினமும் நரசிம்மரை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் பாடி அன்புடன் வழிபடுவர். பக்திப் பாதையில் பக்தர்களுக்கு வரும் அபாயங்களிலிருந்து அவர்களைக் காத்து, அவர்கள் மேலும் முன்னேறுவதற்கு நரசிம்மர் உதவி புரிகிறார்.

கோடை காலத்தின் வெப்பத்திற்கே வெப்பத்தைக் கொடுக்கும் வகையில் தோன்றிய நரசிம்மரின் அவதார தினம் இந்த வருடம் மே மாதம் 09ஆம் தேதியன்று வருகின்றது. சதுர்தசி திதியன்று அவதரித்ததால், அவரது அவதார தினம் நரசிம்ம சதுர்தசி என்று அழைக்கப்பட்டு, அனைத்து பக்தர்களாலும் மிக்க மகிழ்ச்சியுடன் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. நரசிம்மர் மாலை நேரத்தில் அவதரித்தார் என்பதால், பக்தர்கள் அனைவரும் மாலை வரை பகவானின் வருகையை எதிர்பார்த்து உபவாஸம் இருப்பர்; நரசிம்மரின் அற்புத லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கேட்டு சக பக்தர்களுடன் இணைந்து அவரது அவதாரத் திருநாளை நாம ஸங்கீர்த்தனத்துடன் கொண்டாடுவர்.

நரசிம்மரின் பாதுகாப்பை வேண்டி பக்தர்களால் தினமும் பாடப்படும் பிரார்த்தனை:

நமஸ் தே நரஸிம்ஹாய

ப்ரஹ்லாதஹ்லாத–தாயினே

ஹிரண்யகஷிபோர் வக்ஷ:-

ஷிலா–டங்க–நகாலயே



இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ

யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:

பஹிர் ந்ருஸிம்ஹோ ஹ்ருதயே ந்ருஸிம்ஹோ

ந்ருஸிம்ஹம் ஆதிம் ஷரணம் ப்ரபத்யே

“பிரகலாதருக்கு மகிழ்ச்சியைத் தருபவரும், அசுரனான ஹிரண்யகசிபுவின் கல்போன்ற மார்பில் உளி போன்ற தனது நகத்தை வைத்து கிழித்தவருமான பகவான் நரசிம்மருக்கு எனது வணக்கங்கள்.”

“பகவான் நரசிம்மர் இங்கும் இருக்கின்றார், அங்கும் இருக்கின்றார். நான் எங்கு சென்றாலும் நரசிம்மர் அங்கு உள்ளார். வெளியிலும் உள்ளார் இதயத்திலும் உள்ளார். எல்லாவற்றிற்கும் ஆதியாகவும் தஞ்சமளிப்பதில் உன்னதமானவராகவும் விளங்கும் அந்த பகவான் நரசிம்மரிடம் நான் சரணடைகிறேன்.”

தவ கர–கமல–வரே நகம் அத்புத–ஷ்ருங்கம்

தலித–ஹிரண்யகஷீபு–தனு–ப்ருங்கம்

கேஷவ த்ருத–நரஹரி–ரூப ஜய ஜகதீஷ ஹரே

“கேசவரே! அண்டத்தின் இறைவனே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் அவதரித்த பகவான் ஹரியே! எல்லா புகழும் உமக்கே! உமது அழகிய தாமரைக் கரங்களில் உள்ள அற்புதமான கூரிய நகங்களால் சக்திவாய்ந்த அசுரன் ஹிரண்யகசிபுவின் உடல் ஒரு சிறு பூச்சியின் உடலைப் போன்று கிழித்தெறியப்பட்டது.”

நரசிம்மர் ஜெயந்தி

பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். ‘நரன் என்றால் ‘மனிதன். ‘சிம்மம் என்றால் ‘சிங்கம். இதனால் தான் அவனை ‘நரசிம்மன் என்றும், ‘நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே ‘நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், “நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். “ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றானாம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நவ நரசிம்மமூர்த்திகள்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடா காரஸ் ச பார்கவ
யோகா நந்தஸ் சத்ரவடு: பாவனோ நவமூர்த்தய:

Thanks Sai Spritual

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677