Wednesday, August 30, 2017

கணவன் மனைவி வசியம்:

இன்றைய காலகட்டத்தில் பல இளம் தம்பதிகள் பிரிந்து விட காரணம் தாம்பத்ய உறவில் திருப்தி இன்மையும் உடல் பலகீனமும் மனதளவிலும் உடலளவிலும் தன்னுடைய கவர்ச்சியை இழந்து விடுவதுமே காரணம் எனவே இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு காமதேவன் அருள் இல்லையென்றால் இல்லறம் என்றுமே சிறப்பாக இருக்காது
எனவே உடலளவிலும் மனதளவிலும் திருப்தியற்ற இல்லற வாழ்க்கை மேற்கொள்ளும் தம்பதியருக்கு சிறந்த எளிய மந்திரம்
ஓம் க்லீ...ம்ம்ம் காம தேவாய நமஹ
ஓம் க்லீம் காம தேவாய நமஹ
ஓம் க்லீம் ரதி நாதாய நமஹ
ஓம் க்லீம் மோகனாய நமஹ
(தினமும் 108 தடவை)
அல்லது
(ஆண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் காமதேவாய மம பத்னீம் மே வசமானய ஸ்வாஹா
(பெண்களுக்கு மட்டும்)
ஓம் க்லீம் ரதி தேவியை மம பதிம் மே
வசமானய ஸ்வாஹா
மன்மதன் காயத்ரி:
"ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ அநங்கஹ் ப்ரசோதயாத் "
நிறுத்தி நிதானமாக உச்சரிக்க வேண்டும்
இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் காலத்தில் உங்கள் உடலின் சக்தி நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள் உங்கள் உடலிலும் முகத்திலும் காந்தம் போன்ற கவர்ச்சி உண்டாகும் ஒளிமயமான தேஜஸ் உண்டாகும் இதனால் கணவனுக்கு மனைவியிடமும் மனைவிக்கு கணவனிடமும் கவர்ச்சி உண்டாகி ஒருவருக்கொருவர் அந்யோனியமாக இருப்பார்கள் இனப்பெருக்க உறுப்புக்கள் நாளடைவில் பலமடையும் விந்து பெருக்கம் அதிகமாக இருக்கும் உடலுறவில் முழு சுகத்தை பெற்று என்றும் இணை பிரியாத நிலை உண்டாகும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற தயங்கும் தம்பதிகளுக்கு இந்த மந்திரம் பக்க துணையாக இருக்கும் இதனால் பல குடும்பங்கள் தேவையில்லாமல் பிரிவது தவிர்க்கப்படும் மனைவியை தவிர வேறு பெண்ணையோ கணவனை தவிர வேறு ஆணையோ கவர்வதற்கு இதை தவறாக பயன்படுத்துபவர்களின் இல்லற வாழ்க்கை நாசமாகி விடும் காமதேவன் சாபத்தால் மன நிலை சிதைந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விடும் எச்சரிக்கை
திருமணம் ஆகாதவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டாம் குறிப்பாக திருமணமாகாத பெண்களுக்கு இது ஆபத்தாகிவிடும் ஊரார் கண் பொல்லாதது எனவே புரிந்து நடந்து கொள்ளுங்கள்
திருமணமாகாத பிரம்மஹச்சரிய நிலையில் இந்த பிரயோகத்தால் காமத்தை கட்டுபடுத்த முடியாத நிலை உண்டாகி பல தவறுகளுக்கு வழி வகுத்து விடும்
இது இல்லறத்தினர் நலன் கருதியே வெளியிடப்பட்டது.

அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Tuesday, August 29, 2017

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?

1. வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.
2.  வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்
3. வீட்டிற்குுள் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க! பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும்.
4. அந்த காலத்தில் காலணிகளை வெளியேவிட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது கால்களை கழுவி செல்லும் பழக்கம் இருந்தது. அப்படிச் செய்வதால், வெளியே இருந்து நாம் கொண்டு வரும் எதிர்மறை ஆற்றல்களை, வீட்டுக்கு வெளியிலேயே விட்டு சுத்தமாக உள்ளே வந்தார்கள். ஆனால் இன்று இது கடினமான செயலாகி விட்டது. குறைந்தபட்சம் காலணிகளை வாசலில் விட பழகினால், தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை வெளியே நிறுத்தலாமே.
5. வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.
6. தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும்
7.  கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வழியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்
8. தொட்டிகளில் செடிகளும் மரங்களும் வீட்டைச் சுற்றி வளர்ப்பதும் இந்த எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும்.
9. கல் உப்பு கரைத்த நீரில் குளத்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம்.
10. தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும்.
11. நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும்.
12. வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க பழக வேண்டும். வெளிச்சம் எதிர்மறையை நீக்கும்
13. கடவுளின் மீதும் நம் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். நம்முடையே தேர்வுகளே நமது விதியை தீர்மானிக்கின்றது. பிரபஞ்ச சக்தியின் பெரும் கருணை நிறைந்து வாழ்வோமாக!
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, August 24, 2017

வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற

சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
 பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
 பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
 பரமஹம்சர் : துன்பப்படும்போது எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

 பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Tuesday, August 22, 2017

பொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம்.

எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது லோக மாதாஎன்றே குறிப்பிடுவர்.
நம்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு முறை நீண்ட கால பாரம்பரியம் கொண்டது. புராணங்கள், வேதங்கள் இவற்றினை தான் ஆணி வேராகக் கொண்டது. மாத விழாக்கள், வருட விழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறை வந்தது.
கணபதி வழிபாடு, சுப்ரமண்ய வழிபாடு, சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பிகை வழிபாடு கிராம முறை வழிபாடு என பல பிரிவுகளை கொண்டது. இதில் அம்பிகை வழிபாடு முறை நம் நாட்டின் மிகப்பெரிய கலாசார முறையாகும். எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது லோக மாதாஎன்றே குறிப்பிடுவர்.
பொதுவில் செவ்வாய், வெள்ளி என்ற வார நாட்களில் அநேக இந்து குடும்பங்கள் அம்பிகை பூஜை, அம்பிகை கோவில், விளக்கு பூஜை, மாவிளக்கு, நாகவழிபாடு, எலுமிச்சை விளக்கு என அம்பிகையின் வழிபாடு ஊரே களைகட்டி விடும். 
நவராத்திரியும், ஆடி மாதவழிபாடும் அம்பிகை வழிபாட்டில் பிரசித்தி பெற்றவை. இவை சக்தி வழிபாடு. அம்பிகையினை லலிதா திரிபுரசுந்திரியாகவும் தீமைகளை அழிக்கும் காளி மாதாவாகவும் இருமுறைகளில் வழிபடுவர். அதில் ஆடி மாத ஆரம்பத்தினை தட்சணாயன புண்ய காலம் என்பர். அதாவது தேவர்களின் இரவு நேரம் என்பர் இக் காலத்தில் இறைவழிபாட்டிற்கே குறிப்பாக அம்மாள்வழி பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுப்பர்.
மேலும் சூரிய வெப்பம் குறைய ஆரம்பிக்கும் காலம் இது. மழை ஆரம்பிக்கும் காலம் இது. அம்பிகை என்றாலே குளுமைதானே. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்ததினம். சைவ கோவில்களில் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளையல் அணிவித்து கொண்டாடுவர்.
அம்பாளுக்கு இந்த வளையல் அணிவிப்பது அவரவர் சந்ததியினரை நன்கு காக்கும். தீமைகளை விலக்கி விடும் என்பது ஐதீகம்.
பவுர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி பூஜையாக கொண்டாடுவர். கேட்கும் வரங்களை தரும் லட்சுமி என்ற பொருள் படும் பண்டிகை இது. அம்பாளை நினைத்து நாக தேவதையாக புற்றுக்கு பால் ஊற்றுவர்.
இப்படி கொண்டாடப்படும் காலங்களில் அபிஷேகங்கள் ஆராதனைகள், பூ அலங்காரம், மாலை நேரங்களில் பாட்டு கச்சேரி என நகரம், கிராமம் இரண்டுமே களை கட்டி நிற்கும். தமிழ்பாடல்கள், மகிஷாசூர மர்த்தி ஸ்லோகங்கள் அபிராமி அந்தாதி,லலிதா சகஸ்ரநாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப ஸ்துதிகளை மேற்கொள்வர். இதில் மிக விசேஷமாக போற்றப்படும் லலிதா சகஸ்ரநாமம்என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி சிறிதளவேனும் பார்ப்போம்.
லலிதா என்றால் விளையாடுபவள்என்று பொருள் படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம். நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.
லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக இடம் பெற்றுள்ளது. ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றனர். ஸ்ரீபுரம் எனும் அம்பிகையின் இருப்பிடமான ஊரினைப்பற்றி விவரிக்கின்றார். அம்பிகையினை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையைப்பற்றிக் கூறுகின்றார்.
பஞ்சசடாஷ்சரி என ஒன்று படும் ஸ்ரீயந்த்ரம், ஸ்ரீவித்யா, லலிதாம்பிகா, ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதா சகஸ்ரநாமத்தினைப் பற்றிகூறவில்லை. அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா
ஒரு சமயம் லலிதாம்பிகை வாசினி மற்றும் வாக்கு
தேவதைகளை நோக்கி நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார். 
அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக லலிதா சகஸ்ரநாமம்ஸ்லோகத்தினை உருவாக்கினர். ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்த்ரினி, டந்தினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.
கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள். குழந்தைகளே, வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.
பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ஸ்ரீ வித்யாஎனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.
உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ஸ்ரீஎன்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.
லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.
லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள்லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது 
* லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.
* இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.
* உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்
* குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர்.
* அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும்.
* பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும்.
* அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும்.
* கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும்.
* எதிரிகள் நீங்குவர்.
* வெற்றி கிட்டும்.
* பொன், பொருள், புகழ் சேரும்.
* லலிதா சகஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.
* இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினைச் சொல்வதே போதும்.
* தன்னம்பிக்கை கூடும்.
* லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய். 
* ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
படிக்க ஆரம்பித்தால் 1000 நாமத்தினையும் முழுமையாக சொல்லி முடிக்க வேண்டும். பகுதி பகுதியாக இடைவெளி விட்டு சொல்ல வேண்டாம். காலை மாலை இருவேளையும் உகந்த நேரம். ஒருகுரு மூலம் ஆரம்பித்துக்கொள்வது மிகவும் நல்லது.
இத்தனை சக்தி வாய்ந்த லலிதாம்பிகை பற்றி பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது. பண்டாசுரன் என்ற மிக கொடிய அரக்கனை அம்பிகை அழித்ததனைப் பற்றிக் கூறுகின்றது. லலிதா சகஸ்ரநாமம் 1000 நாமங்களைக் கொண்டது. லலிதா த்ரிஸதி 300 நாமங்களைக் கொண்டது. அம்பிகையின் பெருமையினைப்பற்றி ஸ்ரீ ஆதி சங்கரரும், ஸ்ரீ பாஸ்கராச்சார்யா அவர்களும் உரை எழுதியுள்ளனர்.
வெகுகாலம் முன்பு நாரகாசுரன் என்ற அரக்கன் இருந்தான்.அவனது தீய சக்தியால் பிரபஞ்சத்தினை அவன் ஆட்டிப்படைத்தான். கந்த பிரானின் தோற்றமே இவ்வரக்கனை அழிக்க முடியும் என துன்பப்பட்ட தேவர்கள் உணர்ந்தனர். கந்தனின் பிறப்பு தாமதமாகியது. காரணம் சிவ பிரான் நீண்ட ஆழ்ந்த தவத்தில் இருந்தார். சிவபிரான் எழுப்ப வேண்டிய தேவர்கள் மன்மதனை வேண்டினர். மன்மதனும் அவ்வாறே செய்ய தவம் கலந்த கோபத்தால் சிவ பிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் சாம்பலானார். கூடவே கந்தனும் தோன்றினார் மன்மதன் மறைந்ததால் பூ உலகில் மனிதகுலம் தோன்றுவது தடைப்பட்டது.
இதனை உணர்ந்த சிவபிரான் ஆசிர்வாதத்தால் மன் மதன் உயிர் பெற்றான். கூடவே பண்டாசுரன் என்ற அரக்கனும் தோன்றினான். அவனால் மூவுலகமும் பாதிக்கப்பட்டது. சிவபிரானின் அறிவுரைப்படி இந்திரன் மிகப்பெரிய யாகம் ஒன்றினை செய்ய அந்த அக்னியிலிருந்து. லலிதாம்பிகை தோன்றினாள். பண்டாசுரனை அழித்தாள். சிவபிரானை மணந்தாள்.
இப்பிரபஞ்சத்தின் மகாசக்தி யான லலிதாம்பிகையை ஸ்ரீ மாத்ரே நமஹஎன்று தாயாக வணங்கத்தான் ஸ்லோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகையின் அழகினை வர்ணிக்கப் படும் பொழுது நாம் அதில் லயித்து விடுவோம். கரிய நீண்ட கூந்தல், கஸ்தூரி திலகம், அன்பான கண்கள், அந்த கரு விழிகள் ஏரியில் மீன்கள் உலவுவது போல் உலவுகின்றன.
மூக்கில் நட்சத்திரங்கள் மின்ன காதில் சந்திர சூரியன் ஒளிர, கன்னங்கள் பளிங்காய் ஜொலிக்க, பளீர் என முத்துப்பற்கள் பிரகாசிக்க வாசனை கற்பூரம் சேர்த்த தாம்பூலம் தரித்தவளாய் காட்சி தருகின்றாள் என அம்பிகை விவரிக்கும் பொழுது மனம் அதில் ஒடுங்கும். அம்பிகையின் குரல் சரஸ்வதி மீட்டும் வீணையின் ஒலியினை விட இனிமை என்று படிக்கும் பொழுது மனம் அக்குரலைக் கேட்க ஆசைப்படும்.
அந்த புன்முறுவலின் அழகு கண்டு சிவபிரானே தன் கண்களை நகர்த்த முடியவில்லையாம். இப்படியெல்லாம் கூறப்படும் அம்பிகையினை நம் கவனத்தால் உள்ளுணர்வால் ஒருமித்து தியானம் செய்தால் காண முடியும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பிகையைப்பற்றி குறிப்பிடுகையில் நான் ஒரு யந்திரம் நீயே அதனை இயக்குபவன்எனக் கூறியுள்ளார்.
இத்தனை பெருமைகள் நிறைந்த லலிதாம்பிகையை லலிதா சகஸ்ரநாமம், லலிதாத்ரிஸதி சொல்லி வழிபட்டு அனைத்து உயர்வுகளும் பெறுவோமாக.
ஸ்ரீ மாத்ரே நமஹ
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, August 17, 2017

கோயில்களில் மணி அடிப்பதும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்
சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது.
சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.
வேதங்களின் பொருளான ஓம்கார மந்திரத்தைத் தருவதாலும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவன் முன்பு வைத்து வணங்கப்படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு.
மங்கலகரமான பூஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.
மேலும் சங்கு ஊதுவது ஆன்மிக ரீதியாக அல்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றாக செயலாக்கம் பெறுகிறது.
மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கிற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள்.
அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.
கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது.
மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீகசூழ் நிலைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவனிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.
கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டுவதுண்டு.
அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றித்தனமாக
ஏதேதோ சொல்வது உண்டு.
இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறியாமையால் சொல் வதுண்டு.
எழுப்பி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுணர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆயத்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.
பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளின் போது கோயில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும்.
பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. வேலை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.
கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம்
தொழுவார்கள்.
அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங்குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவனைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
ஊருக்கே கேட்கும் வண் ணம் பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.
கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட்க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில்.
அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங்கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோம்.
அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவனிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, August 14, 2017

"வெற்றிக்கான ரகசியம்"

"என்னைப் பலப்படுத்துகிற பிரபஞ்சப் பேராற்றலினால் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலன் உண்டு."
1. "வெற்றி," என்னுடையது. அதை நான்  ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்கிறேன்.
2. "ஆரோக்கியம்", என்னுடையது. அதை   நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக்கொள்கிறேன்.
3. "சுகம்", என்னுடையது. அதை நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்கிறேன்.
4. "மகிழ்ச்சி", என்னுடையது. அதை நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்கிறேன்.
5. "புகழ்", என்னுடையது. அதை  நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்கிறேன்.
6. "செல்வச்செழிப்பு", என்னுடையது. அதை நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக்கொள்கிறேன்.
7. "மன நிம்மதி", என்னுடையது. அதை நான் ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்ளுகிறேன்.
8. "சம்பூர்ணம்", என்னுடையது. அதை  நான் ஈரக்கிறேன். அதைப் பெற்றுக்கொள்கிறேன்.
9. இவை அனைத்தும் அடங்கிய "சுபிட்ச்சம்" என்னுடையது.
அதை நான்  ஈர்க்கிறேன். அதைப் பெற்றுக் கொள்கிறேன்.
10. என் தேவைகள் அனைத்தயும் முழுமையாகத்  தந்துவிட்ட ,
"பிரபஞ்சப் பேராற்றலுக்கு" நன்றியோடிருக்கிறேன். நன்றி செலுத்துகிறேன்.

(மேற்சொன்ன பத்து உறுதிமொழிகளையும் முழு நம்பிக்கையுடன் முனுமுனுத்துச்  சோதித்து  நடப்பதைப்பாருங்கள்.)

அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

*35 காயத்ரி மந்திரங்கள்*!

ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
*1.
வினாயகர் காயத்ரி *
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
*2.
ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
*3.
ஸ்ரீ ருத்ரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
*4.
ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி*
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
*5.
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி*
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
*6.
ஸ்ரீ துர்க்கை காயத்ரி*
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
*7.
ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி*
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்
*8.
ஸ்ரீ ராமர் காயத்ரி*
ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்
*9.
ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி*
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
*10.
ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி*
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்
*11.
ஸ்ரீ சாஸ்தா காயத்ரி*
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்
*12.
ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி*
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
13.
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
*14.
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி*
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
*15.
ஸ்ரீநிவாசர் காயத்ரி*
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
16.
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
17.
நந்தீஸ்வரர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்
*18.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி*
ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்
19.
ஸ்ரீ பிரம்ம காயத்ரி
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
20.
ஸ்ரீ காளி காயத்ரி
ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்
21.
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்
22.
காலபைரவர் காயத்ரி
ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்
*
நவக் கிரஹங்களின்*
*
காயத்ரி* *மந்திரங்கள்

*23.
சூரிய காயத்ரி*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
*24.
சந்திர காயத்ரி*
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
*25.
அங்காரக காயத்ரி*
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
*26.
புத காயத்ரி*
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்
*27.
குரு காயத்ரி*
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்
*28.
சுக்ர காயத்ரி*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
*29.
சனி காயத்ரி*
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்
*30.
ராகு காயத்ரி*
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
*31.
கேது காயத்ரி*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
*32.
நவகிரஹ சாந்தி ஸ்லோகம்*

*ஆதித்யாயச* *சோமாய மங்களாய புதாயச*
*
குருசுக்ர* *சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ*
*33.
வருண காயத்ரி*
ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்
இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ 
*34.
ஸ்ரீஅன்னபூரணி என்றும் உணவு கிடைக்க*
ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
*35.
குபேரன்*
ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்.....
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677