Tuesday, January 31, 2017

உங்கள் உடல் மொழியை மேம்படுத்த சில குறிப்புகள்..!


👉முதலில் நீங்கள் நீங்களாய் இருங்கள் மற்றவரை போல் இருக்க எண்ணாதீர்கள் அது உங்களுடைய சுயத்தை அழித்துவிடும். அதுமட்டுமல்லாது பார்க்கவும் செயற்கையாய் தெரியும்.
👉யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்தே பேசுங்கள், ஆரம்பத்தில் இது சிரமமாய் இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும். நடந்தாலும் அமர்ந்தாலும் நிமிர்ந்தே நிலையிலேயே இருங்கள், குனிந்தாற்போல் நடப்பது உட்காருவது போன்ற உடல் மொழிகள் பார்ப்பவர்களுக்கு உங்கள் மேல் ஒரு தாழ்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும்.
👉எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள், அது உங்களை நிறைவாய் முழுதாய் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும்.
👉யார் உங்களிடம் பேசுகிறார்களோ அவர்களிடம் முழு கவனத்தையும் செலுத்துங்கள், அவர் பேசும்பொழுது அக்கம் பக்கம் பார்க்காதீர்கள் அவ்வாறு செய்தால் அவருக்கு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் ஏற்படக்கூடும்.
👉நடக்கும்பொழுதும், படியேறும்பொழுதும் தரையை பார்த்து நடக்காதீர்கள், நேராக பார்த்து செல்லுங்கள், சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் நீங்கள் நடக்கும்பொழுது உங்கள் தாடை தரையை நோக்கி இருத்தல் வேண்டும்.
👉ஒருவருக்கு கை கொடுக்கும் பொழுது நன்கு இறுக்கமாக பற்றி இரு குலுக்கு குலுக்குங்கள் அது உங்கள் மேல் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும்.
👉நாற்காலியிலோ, டேபிளிலோ அமர்ந்திருக்கும் பொழுது கை கால்களை ஆட்டாதீர்கள், அதேபோல் X அமைப்பில் உங்கள் கால்களை வைக்காதீர்கள். உங்கள் கால்களை அமரும் தொனியிலேயே வையுங்கள்.
👉இவற்றை நீங்கள் முதலில் பின்பற்றும் பொழுது மற்றவர்கள் நகைப்பார்கள் பின்னர் போகப் போக நீங்கள் இப்படித்தான் என்று விட்டுவிடுவார்கள். ஆகவே பிறரை பற்றி கவலைப்படாமல் முன்னேறுங்கள்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

No comments:

Post a Comment